சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.5.90 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 3 கோயில்களுக்கு சொந்தமான ரூ.5.90 கோடியிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.5.90 கோடி நிலங்கள் மீட்பு appeared first on Dinakaran.