ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட வேண்டும்: செங்கை பத்மநாபன் அறிக்கை

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கை: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பை முக்கிய கொள்கையாக கொண்டு பயணித்ததால் முதலில் தலைநகர் டெல்லியையும், அதன்பிறகு பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்து மற்ற சில மாநிலங்களில் கணிசமான சதவிகிதம் வாக்குகளை பெற்றார். தற்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலை இந்திய கூட்டணிக்கான சிந்தனை சிதறல் இல்லாமல் முழு கவனத்தோடு எப்போதும்போல் தனித்து போட்டியிட்டால், அங்கும் ஆட்சி அமைக்க வாய்ப்புண்டு.

இதன் நீட்சியாக வரும் பாராளுமன்ற மன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களின் ஆதரவோடு கணிசமான எம்பிக்களை கொண்டு மத்தியில் ஆட்சி அமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம். ஏன் மத்தியில்கூட ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. ஊழல் குற்றச்சாட்டு கொண்ட கட்சிகளோடு கைகோர்த்தால் ஆம் ஆத்மி கட்சி மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். பேராபத்தை உணர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதும்போல எதிர்காலத்திலும் தனித்தே போட்டியிடவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட வேண்டும்: செங்கை பத்மநாபன் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: