நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை ரத்து செய்வது தான் மாணவர்களை தற்கொலைகளில் இருந்து தடுக்குமே தவிர, மின்விசிறிகளில் செய்யப்படும் மாற்றம் தற்கொலைகளை தடுக்காது.

நுழைவு தேர்வு பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவனும் ரூ.20 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால், நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதபோது தான், தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. இதிலிருந்து மாணவர்களை காக்க நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும், மாணவர்களை காக்க இதை உடனடியாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: