அரியலூர் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் குடிநீரில் பன்றிகள் கும்மாளம்

 

தா.பழூர், ஆக.9: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் குடிப்பதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதிலிருந்து விநியோகிக்கப்படும், நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் நீரானது தென்கச்சி பெரும்பான் நத்தம் கிராமம் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள கிராமம் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நீர்க்குமிழி போல் வீணாகி வெளியேறி வருகிறது.

இந்த குழாய் உடைப்பின் மூலம் வெளியேறும் நீரை அப்பகுதியில் உள்ள பன்றிகள் குளிப்பதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த குடிநீர் உடைப்பானது சுமார் பத்து தினங்களுக்கு மேலாக அப்பகுதியில் இருந்து வருவதால் பன்றிகள் குளித்து ஓய்வெடுத்து விட்டு செல்லும் நீரானது மோட்டார் நிறுத்தப்படும் நேரத்தில் மீண்டும் அசுத்த நீர் உள்வாங்கி, அந்த நீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்வதால் சுகாதார கேடு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதனை உபயோகப்படுத்தும் போது உடல் உபாதைகள் ஏற்படும் என அச்சத்தில் பொதுமக்கள குடிநீரை குடிப்பதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். ஆகையால் உடைப்பு ஏற்பட்டு வீணாகி வரும் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து பொதுமக்களுக்கு சுத்தமான நீரை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரியலூர் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் குடிநீரில் பன்றிகள் கும்மாளம் appeared first on Dinakaran.

Related Stories: