ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு கல்வித் தகுதி, வயது, முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றபட வேண்டும்.

முன்னுரிமை ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன்னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்), பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்), மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்), அருகாமை மாவட்டத்தில் வசிக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

(6 பணியிடங்கள்) (சம்பளம் ரூ.18,000)/ கன்னிகாபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தமிழ், ஆங்கிலம், வேதியல், வரலாறு)- 4 எண்ணிக்கை, கன்னிகாபுரம் மாணவியர் மேல்நிலைப் பள்ளி (வேதியல்)- 1 எண்ணிக்கை. ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, மீனம்பாக்கம் (தமிழ்) -1 எண்ணிக்கை. தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2ம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்றுகளுடன் ஜூலை 5ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: