மாதச் சம்பளத்தாரர்களே உஷார்: வருமான வரி ஏய்ப்பை கண்டறிய புதிய Software அறிமுகம் செய்கிறது வருமான வரித்துறை..!!

சென்னை: வருமான வரியை ஏய்ப்பு செய்யும் மாத சம்பளக்காரர்களை கண்டறியும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. மதச் சம்பளம் பெறுவார்களின் மொத்த ஆண்டு வருவாயில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கழிக்க வருமான வரி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து கழிவுகளும் போக ஆண்டு வருவாய் ரூ.5,00,000-க்கும் குறைவாக இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. வீட்டு வாடகை அளவு வருடத்திற்கு ரூ.1,00,000-க்குள் இருந்தால் வீட்டு வாடகை ரசீதுகளில் வீட்டு உரிமையாளர்களின் பான் கார்டு எண் தேவையில்லை என்ற விதிமுறை உள்ளது.

மாத சம்பளம் பெறுபவர் பலரும் வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்ப்பித்து வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடைபெறுகிறது. இதை கண்டறிந்து அவர்கள் மீது 200% வரை அபராதம் விதிக்க புதிய Software ஒன்றை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. போலி ரசீதுகளை சமர்ப்பித்துள்ள பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-24 முதல் புதிய வரி விதிப்பு முறைக்கும் மாறுபவர்களுக்கு வருடத்திற்கு ரூ.7,00,000 வரையிலான வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால், புதிய முறையில் வீட்டு வாடகை மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு தள்ளுபடி பெற முடியாது. பழைய முறையை தொடர விரும்புவர்கள் அதில் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் புதிய முறைக்கு மாறலாம். ரூ.7,00,000 குறைந்த வருட வருவாய் கொண்டவர்கள் புதிய முறைக்கு மாற வேண்டும் என்று துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். போலி ரசீதுகளை சமர்ப்பித்து வரிவிலக்கு பெற வேண்டிய தேவை இதன் மூலம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மாதச் சம்பளத்தாரர்களே உஷார்: வருமான வரி ஏய்ப்பை கண்டறிய புதிய Software அறிமுகம் செய்கிறது வருமான வரித்துறை..!! appeared first on Dinakaran.

Related Stories: