ஏழை, எளிய மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கை வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

சென்னை: ஏழை, எளிய மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கை வழங்க வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கில் ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். தினசரி சிகிச்சைக்கு வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் வைத்துக்கொள்ள வேண்டியது அரசு மருத்துவமனையின் கடமை.

தமிழக அரசும், சுகாதாரத்துறையும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளிலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் தங்குதடையின்றி வழங்கி முன்னரே இருப்பு வைக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கையும், உத்திரவாதத்தையும் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post ஏழை, எளிய மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கை வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன் appeared first on Dinakaran.

Related Stories: