கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமில் அமைச்சர் ஆய்வு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம் நடக்கிறது. இதை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு செய்தார். டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் திமுக பேரூர் செயலாளருமான அபிராமி, செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் முன்னதாக பூண்டி ஒன்றியம் அம்மம்பாக்கம் கிராமத்தில் நடந்த கலைஞர் மகளிர் திட்ட முகாமை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

இதில் கலெக்டர் ஆல்பீ ஜான்வர்கீஸ், எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி சந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜான்பொன்னுசாமி, சந்திரசேகர், ஊராட்சி தலைவர் சரசுபூபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றியம் வெங்கல் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாமை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார். அவருடன் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஒன்றியச்செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட துணைச்செயலாளர் சீனிவாசன், முனுசாமி, நிர்வாகிகள் லோகநாதன், நாகலிங்கம், சுப்பிரமணி, ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: