மேலும் கடந்த நிதி ஆண்டில் ரூ.4534 கோடியாக இருந்த நிகர வட்டி வருவாய் இந்த நிதியாண்டு ரூ.5703 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது 26 சதவீதம் அதிகம். மேலும் மொபைல் பேங்கிங் உபயோகிக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை 36 சதவீதம் உயர்ந்துள்ளது, யூபிஐ மற்றும் ஆன்லைன் பண வர்த்தனை பயனாளர்கள் 33 சதவீதத்திலிருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது. 59 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கணக்கு உள்ளன, ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்குகிறோம். தங்க நகை கடனில் நாளொன்றுக்கு ரூ.200 கோடி வணிகம் நடைபெறுகிறது. 85 சதவீத வங்கி சார்ந்த வணிகம் டிஜிட்டல் மையம் ஆகிவிட்டது. ஆண்டுதோறும் அனைத்து பிரிவுகளிலும் இந்தியன் வங்கி வளர்ச்சி அடைந்து வருகிறது.
The post இந்தியன் வங்கியின் நிகர லாபம் 41 சதவீதம் அதிகரிப்பு appeared first on Dinakaran.
