சவுதி அரேபியாவில் அரசு மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 35 வயதுக்கு உட்பட்டவர்கள் சவுதி அரேபிய அரசு மருத்துவமனை பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி பெர்பியூசனிஸ்ட் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட ஆண்/பெண் பெர்பியூசனிஸ்ட் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் பெங்களூரில் வருகிற 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டு பயனடையலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி (9566239685, 6379179200) (044-22505886/044-22502267) மூலம் அறியலாம். மேலும், ovemclmohsa2021@gmail.com மின்னஞ்சல் வழியாக சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை உடனடியாக அனுப்ப வேண்டும்.

The post சவுதி அரேபியாவில் அரசு மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: