திருத்தணி, : திருத்தணி – திருவள்ளூர் கூடுதல் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களை சேர்ந்த கிராமங்களில் இருந்து சென்னை – திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பணிகளுக்கு சென்று வருகின்றனர். அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் வணிகர்கள் என பலரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தினமும் திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்து பின்ன்ர் அங்கிருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ரயில் நிலையம் பராமரிப்பு காரணமாக ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை கருடா திரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக இந்த ரயிலின் பயணம் செய்து வந்த பயணிகள் பலரும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, காலை 7 மணி முதல் 10 மணி வரை அதேபோல் மாலை நேரங்களில் 4 மணி முதல் 8 மணி வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் போக்குவரத்து கழகத்திற்கும் மாவட்ட கலெக்டருக்கும் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
The post திருத்தணி – திருவள்ளூர் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
