செஞ்சியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: அடுத்தடுத்து 4 வீடுகளில் நள்ளிரவில் தங்க நகைகள், வெள்ளி, ரொக்கம் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வீடுகளை நோட்டமிட்டு முகமூடி கொள்ளையர்கள் நள்ளிரவில் கைவரிசை காட்டியது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரிய கரம் ரெங்கசாமி தெருவில் வசிக்கும் தனியார் கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இன்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோன்று அதே தெருவில் அன்பழகன், நாகராஜ், வினோத் ஆகியோரது வீடுகளிலும் முகமூடி கொள்ளையர் ரொக்கம், வெள்ளி கொலுசு உள்ளிட்டவற்றை திருடி உள்ளனர். டார்ச் லைட் உதவியுடன் கொள்ளையர் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதனிடையே சிறுகடம்பூர் பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உண்டியலை திருடி சென்று விட்டனர். இந்த சம்பவங்களால் அச்சம் அடைந்துள்ள செஞ்சி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

The post செஞ்சியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: அடுத்தடுத்து 4 வீடுகளில் நள்ளிரவில் தங்க நகைகள், வெள்ளி, ரொக்கம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: