ஆடி அமாவாசையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை : திரளான பக்தர்கள் தரிசனம்

மேல்மருவத்தூர்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடி அமாவாசை வேள்வி பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடி அமாவாசை வேள்வி பூஜை விழா நேற்று விடியற்காலை 3 மணியளவில் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 3.30 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணி அளவில் பங்காரு அடிகளார் சித்தர் பீடம் வந்தார். அவருக்கு, கோவை மாவட்ட ஆன்மிக இயக்க பொறுப்பாளர்களும் சித்தர் சக்திபீட நிர்வாகிகளும் பாதபூஜை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பங்காரு அடிகளார் சித்தர் பீடத்தை வலம் வந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு பூஜை செய்து ஆடி அமாவாசையொட்டி அமைக்கப்பட்ட சதுர வடிவிலான பொது யாககுண்டத்தில் கற்பூரமிட்டு வேள்வியை தொடங்கி வைத்தார். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆதிபராசக்தி அம்மனை வணங்கி வழிபட்டனர். இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், கல்லூரி தாளாளர் ஸ்ரீலங்கா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவை மாவட்டம் பாரதி நகர், ஓம் சக்தி நகர், ஹிட்கோ காலனி, மற்றும் மேட்டுப்பாளையம் சித்தர் சக்தி பீடங்கள் பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post ஆடி அமாவாசையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை : திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: