திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா: அறங்காவலர்கள் குழு ஆலோசனை

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா முன் ஏற்பாடுகள் குறித்து அறங்காவலர்கள் குழு தலைவர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி ஆடி பரணியுடன் தொடங்கி 9ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. சரவண பொய்கை திருக்குளத்தில் முதல்நாள் தெப்பத்திருவிழா நடைபெறும். ஐந்து நாட்கள் நடைபெற உள்ள விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் திருத்தணி கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இந்நிலையில், ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அறங்காவலர்கள் குழு கலந்தாயுவு கூட்டம மலைக்கோயில் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணை ஆணையர் விஜயா முன்னிலை வகித்தார். அறங்காவலர்கள் மு.நாகன், சுரேஷ்பாபு, மோகனன், உஷா ரவி பங்கேற்றனர்.

இதில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் தங்குதடையின்றி காவடிகள் செலுத்தி சுவாமி தரிசனம் செய்ய முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும், முக்கிய பிரமுகர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு அனுமதி சீட்டு, கார் பாஸ் தொடர்பாகவும், மலைக் கோயிலில் குடிநீர், அன்னதானம், தங்குமிடம், தூய்மை பணிகள் மேற்கோள்வது, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

The post திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா: அறங்காவலர்கள் குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: