பள்ளிகளுக்கு இடையேயான எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் டி20 கிரிக்கெட் போட்டி: ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி வெற்றி

திருவள்ளூர்: பூந்தமல்லி சாவடி சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான 2வது மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி கல்லூரியின் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவிற்கு கல்லூரித் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 10 அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியாக இப்போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டி திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளிக்கும், எபினேசர் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளிக்கும் இடையே நடைபெற்றது.‌ இதில், திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரித் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். ஆட்டநாயகன் விருதை ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளியை சேர்ந்த யோகேஷ், சிறந்த பேட்ஸ்மேன் விருதை எபினேசர் பள்ளியை சேர்ந்த அகமத் பாஷா, சிறந்த பந்துவீச்சாளர் விருதை எபினேசர் பள்ளியை சேர்ந்த கிஷன் , சிறந்த தொடர் நாயகன் விருதை ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளியை சேர்ந்த ஹரிஷ் ஆகியோர் வென்றனர். இந்த போட்டியை கல்லூரியின் உடற்கல்வித் துறை இயக்குநர் சிவமாரன், உதவி இயக்குநர் ஹரிபாபு ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

The post பள்ளிகளுக்கு இடையேயான எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் டி20 கிரிக்கெட் போட்டி: ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: