கோத்தகிரி மரக்கடை அருகே குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

 

கோத்தகிரி, ஜூலை 1: கோத்தகிரியில் தனியார் மரக்கடை அருகே உள்ள குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே தனியார் மரக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மரம் சார்ந்த வீட்டு கட்டுமான பொருட்கள் மற்றும் மரவகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மரக்கடையில் பணியாற்றி வரும் நபருக்கு அங்கு குடியிருப்பு உள்ளது. இங்கு நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அருகே மரக்கடையில் பணியாற்றி வந்த நபர்கள் உடனே அங்கு சென்று பார்த்த போது வீடு முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அருகில் உள்ள மரக்கடைக்கு தீ பரவாமல் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மேலும், கோத்தகிரி மேட்டுப்பாளையம் பிரதான நகர் சாலையில் தீ விபத்து ஏறப்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது மின்கசிவு மூலம் ஏற்பட்டதா? அல்லது அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோத்தகிரி மரக்கடை அருகே குடியிருப்பில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.