சிறைச் சந்தை விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி

சென்னை: சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் “சிறைச் சந்தை” விற்பனை நிலையத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி, சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் “சிறைச் சந்தை” விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த விற்பனை நிலையத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் தயாரிக்கப்படும் தரமான பொருட்கள் மலிவான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

மேலும் சிறைத்துறை தலைமை அலுவலகப் பணியாளர்களுக்காக நவீன “உடற்பயிற்சிக் கூடம்” ஒன்றும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. சிறைகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள், சிறை நிர்வாகம் தொடர்பான கட்டுரைகள் மற்றும் சிறைவாசிகளின் படைப்புகளை உள்ளடக்கமாக கொண்ட “சிறகிதழ்” என்ற மாத இதழின் முதல் பிரதியை மாண்புமிகு சட்ட அமைச்சர் வெளியிட சிறைத்துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, ஐ.பி.எஸ். பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் இரா.கனகராஜ், சிறைத்துறை துணைத் தலைவர், தலைமையிடம், ஆ.முருகேசன், சிறைத்துறை துணைத் தலைவர், சென்னை சரகம், பிற அலுவலர்கள் மற்றும் சிறைத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சிறைச் சந்தை விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Related Stories: