சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்குள் இருமடங்காக எண்ணிக்கை உயரும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 66 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்கள், இணையதளம், பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னையில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. பீக் ஹவர்ஸ் என்று குறிப்பிடப்படும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும் எனில் ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்று பொதுமக்கள் டிக்கெட் எடுத்துகொள்ளலாம். மேலும் QR குறியீடு, பயண அட்டை போன்ற நடைமுறைகளில் டிக்கெட் எடுத்து கொள்ளலாம். இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய முறை இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ்அப் எண் காட்டப்படும். அதன்பிறகு, அது புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்திற்கான விருப்பங்களை காட்டும். பயணிகள் தங்கள் பயண விவிரங்களை உள்ளிட்டால் இறுதியாகப் பயணிகளை கட்டண விருப்பங்களுக்கு அழைத்துச் செல்லும். டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே என எதுவாக இருந்தாலும், பணம் செலுத்த பல விருப்பங்கள் கிடைக்கும். பின்னர் பயண டிக்கெட் பயணியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பப்படும் ” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் 2 மடங்காக உயரும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: