இதை தட்டிக்கேட்ட தவமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மங்கலம் காவல் நிலையத்தில் தவமணி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்தாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் மாசிலாமணி, தவமணி ஆகியோர் குடும்பத்தோடு நேற்று காலை புதுச்சேரி சட்டசபைக்கு வந்தனர். அப்போது முதல்வர் ரங்கசாமி கார் அலுவலக படிக்கட்டு அருகில் வந்து நின்றது. படிக்கட்டிலிருந்து ஓடிவந்த மாசிலாமணி வாட்டர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முதல்வர் முன்னிலையில் தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
இதேபோல் தவமணியும் முதல்வர் காலில் விழுந்து கதறி அழுதபடி பெட்ரோல் ஊற்ற முயன்றுள்ளார். இதில் முதல்வரின் காரில் பெட்ரோல் கொட்டியது. உடனே அதிகாரிகள், காவலர்கள் ஓடிவந்து பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டதால் அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை. இதனால் முதல்வர் ரங்கசாமி உயிர் தப்பினார். இதையடுத்து அவர்களின் குறைகளை தீர்க்க காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்பின் அவர்களை போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.
The post புதுவை சட்டசபை வளாகத்தில் பரபரப்பு தீக்குளிக்க முயன்ற அக்கா-தம்பி உயிர் தப்பிய முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.
