நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனமாக முதலிடம் பிடித்தது சென்னை ஐஐடி; புத்தாக்க துறையில் 2வது இடம்..!!

சென்னை: நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தலைசிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. டாப் 100ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு;

* நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது.

* சென்னை ஐஐடி 5-வது முறையாக சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

* இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அண்ணா பல்கலை.க்கு 18-வது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

* நாட்டின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை மாநில கல்லூரி 3 வது இடம் பிடித்தது.

* நாட்டின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி 7 வது இடம் பிடித்தது.

* கட்டட வரைவியல் திட்டமிடல் சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் திருச்சி என்ஐடி 4 வது இடத்தை பிடித்தது.

* மருத்துவம் சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் வேலூர் சிஎம்சி 3-வது இடத்தை பிடித்தது.

* மருத்துவம் சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் புதுச்சேரி ஜிப்மர் 5-வது இடத்தில் உள்ளது.

* தலைசிறந்த பல் மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் சென்னை சவீதா கல்லூரி முதலிடத்தில் உள்ளது.

* ஆராய்ச்சி படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி 2-வது இடத்தில் உள்ளது.

* புத்தாக்க துறையில் சென்னை ஐஐடி 2-வது இடம் பிடித்துள்ளது; காஞ்சிபுரம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 8-வது இடத்தில் இருக்கிறது.

* வேளாண் படிப்புகளை வழங்கும் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் கோவை வேளாண் பல்கலை. 5-வது இடம் பெற்றுள்ளது.

* ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் கோவை அமிர்த விஸ்வா வித்யாபீடம் 7-வது இடம் பிடித்தது.

* ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் வேலூர் விஐடி 8-வது இடம் பிடித்தது.

* தலைசிறந்த பொறியியல் கல்வி நிறுவன பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம், திருச்சி என்ஐடி 9-வது இடம் பிடித்தன.

The post நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனமாக முதலிடம் பிடித்தது சென்னை ஐஐடி; புத்தாக்க துறையில் 2வது இடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: