இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள்… : கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!!

சென்னை : இசைஞானி இளையராஜா 80வது பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள்… : கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: