பெரம்பலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் மகிழ்ச்சியான ஞாயிறு மகிழ்ச்சியான தெரு-எஸ்பி தலைமையில் நடந்தது

பெரம்பலூர் : பெரம்பலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் மகிழ்ச்சியான ஞாயிறு, மகிழ்ச்சியான தெரு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் படி, பெரம்பலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையை பயனுள்ள தாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில், பெரம்பலூர்மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று 28-ம் தேதி பெரம்பலூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான வெங்கடேச புரத்தில் \”மகிழ்ச்சியான ஞாயிறு\”,மகிழ்ச்சியான தெரு\” என்ற நிகழ்ச்சி பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம் ளா தேவி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரம்ப லூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் நேரத்தை பயனுள்ளதான தாக மாற்றும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி களான தப்பாட்டம், சிலம் பாட்டம், குச்சிப்பிடி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும், காவல்துறையின் வாத்திய குழுமூலம் இன்னிசை நிகழ்ச்சியும், ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், போதை பழக்க வழக்கங்களில் அடிமையா வதைத் தவிர்க்குமாறும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், போக்குவரத்து விதிகள்குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பொது மக்கள் பலர் கலைநிகழ்ச்சி யில் கலந்துகொண்டுமகிழ்ச்சியாக நடனம் ஆடினர். சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த கேளிக்கை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, நேற்று பெ ரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் நடத்தியது பொது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைபெற்றுள்ளது.

மேலும் சிறப்பாக நடனம் ஆடியவர்களுக்கு எஸ்பி ஷ்யாம்ளாதேவி சிற ப்பு பரிசு வழங்கி பாராட்டி னார். நிகழ்ச்சியில் பெரம்ப லூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழ கன், வேலுமணி (மது வில க்கு அமலாக்க பிரிவு), பழ னிச்சாமி (பெரம்பலூர் உட் கோட்டம்), சீராளன் (மங்க ளமேடு உட்கோட்டம்) மற் றும் இன்ஸ்பெக்டர்கள், சப். இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் மகிழ்ச்சியான ஞாயிறு மகிழ்ச்சியான தெரு-எஸ்பி தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: