மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 4, 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் கருத்தாளர் பயிற்சி-மாவட்ட அளவில் நடைபெற்றது

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் கருத்தாளர் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 4 மற்றும் 5ம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் குறித்து மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி

நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் வளர்மதி தொடங்கி வைத்து, எண்ணும் எழுத்தும் பயிற்சி சார்ந்த விளக்கத்தை காணொலி காட்சி வாயிலாக பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறி விளக்கி பேசினார். இதில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், புரிதலோடு கூடிய செயல்பாடு வழியான கல்வியை மைய்யமாகக் கொண்டு இப்பயிற்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 48 ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், 8 ஒன்றியங்களின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுனர்கள் பலர் கலந்து கொண்டு எவ்வாறு மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்தலை மேற்கொள்ளலாம் என்பது குறித்த தகவல்களை செயல்பாடுகள் மூலம் பயிற்சினை பெற்றுக்கொண்டனர்.

மேலும், குழந்தைகளை மையப்படுத்தி அவர்களின் திறனை வளர்ப்பதற்காகப் படைப்பாற்றல் களஞ்சியம், செயல்பாட்டுக் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் மற்றும் வரலாற்று களஞ்சியம் ஆகிய களஞ்சியங்கள் வகுப்பறையில் அமைப்பதற்கு ஏதுவாக இப்பயிற்சியில் மாதிரி களஞ்சியங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தக்கூடிய எளிமையான துணைக்கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இப்பயிற்சியில் கருத்தாளர்கள் ஜான்சன், சுகிர்தராஜன், ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 4, 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் கருத்தாளர் பயிற்சி-மாவட்ட அளவில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Related Stories: