அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் எந்த ஒரு பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது : பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ்

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எந்த ஒரு பாடப் பிரிவும் நீக்கப்படாது என அதனை துணை வேந்தர் வேல்ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார். நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான முடிவு அண்மையில் நடந்து முடிந்த 29வது அகாடமி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த தகவல் தவறானது என விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ், உறுப்பு கல்லூரிகளில் நடப்பாண்டு எந்த பாடப்பிரிவும் நீக்கப்படாது என தெளிவுபடுத்தி உள்ளார். மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த கல்லூரிகளில் மட்டுமே குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை நீக்க திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் அதிலும் தமிழ் வழி மட்டுமின்றி, சில ஆங்கில மொழி பாடப் பிரிவுகளையும் நீக்க ஆலோசித்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் உயர்கல்வித் துறை உத்தரவின் பேரில் நடப்பு கல்வியாண்டில் எந்த ஒரு பாடப்பிரிவு நீக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

The post அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் எந்த ஒரு பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது : பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் appeared first on Dinakaran.

Related Stories: