இப்ளையிங் டாக்சி மூன்று ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் செயற்கை வைரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ₹249 கோடி ஒதுக்கீடு: ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்

சென்னை: ஐஐடியின் இ ப்ளையிங் டாக்சி மூன்று ஆண்டுகளில் வணிகரீதியான பயன்பாட்டிற்கு வரும். மேலும் செயற்கை வைரம் தயாரிக்கும் திட்டத்திற்காக ₹249 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறினார். இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சென்னை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ‘இன்ஸ்டிட்யூட் ஆப் எமினன்ஸ்’ திட்டத்தின் ஒரு பகுதியாக 15 சிறப்பு மையங்களை அறிமுகப்படுத்தியது. இந்த மையங்கள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கவும் அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான பணிகளை மேற்கொள்ளும்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியதாவது: 2018-2019ம் ஆண்டு முதல் ஐஐடியில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ₹1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக 25 ஆண்டுகளுக்கு என்ன தேவையோ அதுகுறித்தான பலவிதமான புதுப்புது ஆலோசனைகள் வரப்பெற்றன. அதில் உலக அளவிலான ஆராய்ச்சியாளர்களை கொண்டு பரிசீலனை செய்ததில் இரண்டாம் கட்டமாக 15 ஆலோசனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பொறியியல், தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவிற்கான தொழில் நுட்பங்களை கொண்டு வருவதற்காக விரைவாக உதவி செய்யும்.

விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டர் உள்ளிட்டவற்றிற்கு அதிக எடையுள்ள பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் எடை குறைவான இயந்திரங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இது ஆர்கானிக் முறையில் கெமிக்கல் இல்லாத உயிரி உரம் சார்ந்த விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்ளையிங் டாக்சி வடிவமைப்புக்கு பல ஒப்புதல்கள் பெற வேண்டியுள்ளதோடு, மனிதர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் ஒப்புதல்களும் பெற வேண்டியுள்ளதால் வணிகரீதியான பயன்பாட்டிற்கு வர மூன்று வருடங்களாவது ஆகும்.
செயற்கை வைரம் தயாரிக்கும் திட்டத்திற்காக ₹249 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 18-20 மாதங்களுக்குள் முதற்கட்ட ஆராய்சி முடிவுகள் குறித்து தெரிவிக்கப்படும்.

The post இப்ளையிங் டாக்சி மூன்று ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் செயற்கை வைரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ₹249 கோடி ஒதுக்கீடு: ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: