விளைச்சல் அமோகம் எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் மிளகாய் அறுவடை தீவிரம்

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் வட்டார பகுதியில் மிளகாய் வற்றல் சாகுபடிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. தற்போது பல நிலங்களில் அறுவடைப்பணி மும்முரமாக நடைபெறுகிறது. அன்றாட உணவில் தவிர்க்க முடியாதவைகளில் மிளகாய் வற்றலும் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதி வற்றல் மிகவும் புகழ்பெற்றது என்றாலும் பல மாவட்டங்களில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வற்றல் சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனர். நெல்லை மாவட்டம், மானூர் வட்டாரத்தில் பூ மற்றும் நெல் நடவு, வாழை போன்றவை முக்கிய விவசாயப்பணிகளாக உள்ளன. சிறிய அளவில் சில விவசாயிகள் காய்கறி பயிரிடுகின்றனர்.

இங்கு மிளகாய் சாகுபடி செய்து வந்த சில விவசாயிகள் தற்போது மிளகாய் வற்றல் சாகுபடி செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளனர். 70 நாட்களில் பலன் கிடைக்கும் மிளகாய் வற்றல் மானூர் அருகே தேவர்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது பல நிலங்களில் விளைந்த மிளகாய் வற்றல் தற்போது பறிக்கும் பணி நடைபெறுகிறது. மிளகாய் பறிக்க ரூ.300வரை கூலி தரப்படுகிறது என்பதால் பலர் இப்பணிக்கு வருகின்றனர்.

பறித்த மிளகாயை காயவைத்து வற்றலாக மாறியதும் சங்கரன்கோவில் மற்றும் நெல்லை டவுன் ெமாத்த வற்றல் மண்டிகளில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். நல்ல விலை கிடைப்பதால் வற்றல் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post விளைச்சல் அமோகம் எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் மிளகாய் அறுவடை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: