ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரினால் 7 நாளில் காவல்துறை முடிவை தெரிவிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஆடல், பாடல் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனு தந்தால் 7 நாட்களுக்குள் பரிசீலித்து அனுமதி தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி ஆடல்-பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் மற்றும் நடன, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையும், நீதிமன்றமும் ஏற்கனவே விதித்துள்ளது.

இந்நிலையில் சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தனித்தனியே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவின் விசாரணையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு தந்தால் 7 நாட்களில் அனுமதி தர வேண்டும் அல்லது இல்லை என கூற வேண்டும். மேலும், 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என்றால் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் புதிதாக சுற்றறிக்கை அனுப்ப டிஜிபி-க்கு ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. மேலும், விசாரணைக்கு வந்த மனுக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரினால் 7 நாளில் காவல்துறை முடிவை தெரிவிக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: