போக்குவரத்து விதியை மீறியதாக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு அரசு லட்சினை பொறிக்கப்பட்டு, கருப்பு ஸ்டிக்கர், பம்பர் போன்றவை பொருத்தப்பட்டு, நம்பர் பிளேட் சரிவர தெரியாத நிலையில் வெள்ளைநிற கார் ஒன்று செல்வதாக நேற்று முன்தினம், சென்னை போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், விதி மீறலுக்காக ரூ.2,500 அபராதம் விதித்து, அதற்கான ரசீதை புகார்தாரருக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அரசு பதவியில் இருப்பதால் தமிழக அரசின் லட்சினையை தனது சொந்த காரில் அவர் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.‘ எனினும் போக்குவரத்து விதிமீறலால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

The post போக்குவரத்து விதியை மீறியதாக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: