மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் காலமானார்: பல்வேறு தலைவர்கள் இரங்கல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். தொழிலதிபர் கரு.முத்து கண்ணன் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுள்ளார். மதுரை நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர் இவருடைய பொறியியல் கல்லூரி கலைக்கல்லூரிகளில் வசதியில்லாத மாணவர்களுக்கும் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். தமிழ்நாடு அரசு 2015ம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் விருது அவருக்கு வழங்கியது.

நடுவண் அரசு ஜவுளிக் குழு தலைவர் பதயிலும் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் கோளாறு காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை (மே 24) பகல் 2 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் காலமானார்: பல்வேறு தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: