தோட்டக்கலை துறை விளக்கம் அடுக்கு மாடி கட்டடம் கட்டி தருவதாக சொன்னவர்கள் செய்யவில்லை குறை தீர்க்கும் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் குமுறல்

 

கரூர், மே 23: அடுக்கு மாடி கட்டடம் கட்டி தருவதாக சொன்னவர்கள் செய்யவில்லை என்று கரூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்துள்ளனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கேஎம்சி காலனி மற்றும் ரத்தினம் சாலை பகுதியினர் சிலர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் 5 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். 130 குடும்பங்கள் இந்த பகுதியில் உள்ளது. நாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா இல்லாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் மனுக்கள் கொடுத்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சில அதிகாரிகள் வந்து, குடியிருப்புகளை உடனடியாக காலி செய்து தந்தால், புதிதாக அந்த பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டி அனைவருக்கும் தருவதாக சொன்னார்கள். ஆனால், வீடுகளை காலி செய்து விட்டு அதுவரை நாங்கள் எங்கு செல்வது. எங்கள் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே, எங்கள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால், அதுவரை நாங்கள் அனைவரும் குடியிருக்க மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

The post தோட்டக்கலை துறை விளக்கம் அடுக்கு மாடி கட்டடம் கட்டி தருவதாக சொன்னவர்கள் செய்யவில்லை குறை தீர்க்கும் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் குமுறல் appeared first on Dinakaran.

Related Stories: