சென்னை: தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்த அரசு செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதை தடுப்து குறித்த கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் அனைத்து துறைகளின் செயலாளர்கள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் வழங்கப்பட்ட அறிவுரைகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் பின்வருமாறு எடுத்துரைத்தார்.
கோடைகால கடுமையான வெப்பத்தினால் தாக்காத வகையில், மனிதன் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும், அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ் எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும், இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட வேண்டும். நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும், மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும், மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்லவும், உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்போது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
அதேசமயம், வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லக் கூடாது. சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் அதிக வெப்பத்தில், மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் இக்கூட்டத்தில், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட குறித்தும் தலைமைச் செயலாளர் விரிவான அறிவுரைகளை வழங்கினார். இந்த அறிவுரைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொகுத்து அனைத்து துறைகளுக்கும் வழங்க வேண்டும், தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் மூலம் இவை பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணித்திட வேண்டியதன் அவசியத்தையும் தலைமைச் செயலாளர் எடுத்துரைத்தார்.
The post பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை appeared first on Dinakaran.