கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் முள்ளங்கிக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் முள்ளங்கிக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் அறுவடை செய்த முள்ளங்கிகளை விவசாயிகள் சாலை ஓரங்களில் கொட்டி செல்கின்றனர். ஓசூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பால் அதன் விலை பெரும் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போதைய சூழலில் முள்ளங்கி கிலோ ரூ. 5க்கு கீழ் குறைந்து கொள்முதல் செய்யபப்டுவதால் விவாசியிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அறுவடை செய்யப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு வரக்கூடிய கூலி செலவு கூட கிடைக்காத முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் அறுவடை செய்த முள்ளங்கிகளை குவியல் குவியலாக சாலை ஓரங்களில் விவசாயிகள் கொட்டி செல்லும் அவளம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர் உள்ளிட்ட இடங்களில் தகுந்த வெப்பம் நிலை நிலவுவதால் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி, அவரை, முள்ளங்கி , கேரட், குடைமிளகாய், உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில நாடகளாகவே முள்ளங்கி அதிகப்படியாக விளைந்து பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சுற்றுவட்டாரத்தில் முள்ளங்கிக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: