காலாவதி உணவு பொருட்கள் விற்பனை

 

கோவை, மே 10: கோவை மாவட்டத்தில் வடகம், வத்தல் உள்ளிட்ட எண்ணெய் மூலமாக பொரிக்கப்படும் உணவு பொருட்களில் கலர் கூட்டும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதாக புகார் கிடைத்துள்ளது. வத்தல், வடகம் போன்றவற்றில் சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்ச் போன்ற நிறமிகள் வேதிப்பொருட்கள் கலவையுடன் சேர்க்கப்பட்டு மக்களை கவரும் வகையிலான நிறங்களுடன் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகம், குடல், வத்தல் தயாரிப்பு கூடங்களில் செயற்கை நிறங்கள் அதிகளவு கலக்கப்படுவதாக தெரிகிறது. இந்த தயாரிப்பு கூடங்களில் இருந்து உணவு மாதிரி ஆய்விற்கு எடுத்து சோதனை நடத்தவேண்டும். கலரிங் ஏஜன்ட் பயன்படுத்தி உணவு பொருட்கள் தயாரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நோய் பரப்பும் நிலையில் உள்ள உணவுகளை விற்பனைக்கு வைக்கக்கூடாது. இது தொடர்பாக சோதனை நடத்தவேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் தெரிவித்துள்ளது.

வத்தல், வடகம் மட்டுமின்றி அல்வாக்களிலும் நிறம் கூட்டி விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கலரிங் பொருட்கள் வயிறு, குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தயாரிப்பு கூடம், வியாபாரிகளுக்கு கலர் கூட்டிய பொருட்களை விற்க கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில உணவு பொருட்கள் சப்ைள குடோன்கள், வணிக நிறுவனங்களில் காலாவதியான உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சில குடோன்களில், வணிக கடைகளில் காலாவதி தேதியை மாற்ற புதிதாக தேதி எழுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பதும் நடக்கிறது. காலாவதி உணவுகளை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என நுகர்வோர் எதிர்பார்த்துள்ளனர்.

The post காலாவதி உணவு பொருட்கள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.