கூத்தாண்டவர் கோவில் திருவிழா: சித்திரை தேரோட்டத்திற்கு ஏராளமான மக்கள் வருகை..!!

விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் சித்திரை தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ம் தேதியிலிருந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தின்னந்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் நடைபெற்று வந்த நிலையில் இருந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலிகட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மற்றும் இன்றி இந்தியா முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கனக்கான திருநங்கைகள் தங்களை அழகு பதுமைகளாக அலங்கரித்து நகைகளை அணிந்து கொண்டு கோவில் பூசாரி கையால் அரவாணனை கணவனாக நினைத்து தாலிகட்டினர். பின்பு விடிய விடிய அரவாணி, திருநங்கைகளை பாடலாக பாடி திருநங்கைகள் குமியடித்து இரவு முழுவதும் ஆடி மகிழ்ந்தனர். இதில் சென்னையை சேர்ந்த திருநங்கைகள் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான குந்தவை நந்தினி போல அலங்காரம் செய்து தாலிகட்டி வழிபட்டது விழாவின் சிறப்பு அம்சமாக இருந்தது.

விழாவில் இன்று சித்திரை தேரோட்ட திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலில் இருந்து அரவாண் சிரசு எடுத்துவரப்பட்டு பின்னர் சுற்றியுள்ள கிராமங்களில் கைகள், அரசிலை, பின்குடை , மாலைகள் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் எடுத்து வந்து தேர்செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் பொதுமக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தங்களது விவசாய நிலங்களில் விளைந்த விளைபொருட்களான மஞ்சள், கம்பு, மாங்காய்,முருங்கை உள்ளிட்ட இவைகளை சுரைவிட்டு கூத்தாண்டவரை வழிபட்டனர்.

வானவேடிக்கையுடன் தேர் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியே பந்தலடுக்கி செல்கிறது. அங்கு அரவாண் கலசமிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கலசலைக்கு பிறகு அங்கு செல்லும் திருநங்கைகள் நேற்று இரவு கட்டிய தாலியை அறுத்தும் வளையல்களை உடைத்தும் பொட்டுகளை அழித்தும் ஒப்பாரிவைத்து அழுதும் தங்கள் சோகத்தை வெளிப்படுத்துவார்கள் பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் குளித்து விட்டு வெள்ளை புடவை உடுத்தி விதவை கோலம் பூண்டு சோகத்துடன் தங்களது வீட்டிற்கு செல்வார்கள். பின்பு மாலை பள்ளிசோறு பலவிதம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் நாளை விளையாட்டு நிகழ்ச்சி, 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகதுடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

The post கூத்தாண்டவர் கோவில் திருவிழா: சித்திரை தேரோட்டத்திற்கு ஏராளமான மக்கள் வருகை..!! appeared first on Dinakaran.

Related Stories: