காஞ்சிபுரத்தில் நேரு மார்க்கெட் தற்காலிக இடமாற்றம்

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் பகுதியில் செயல்படும் நேரு மார்க்கெட்டில் புதிதாக கட்டிடப் பணிகள் தொங்கவுள்ளநிலையில், தற்காலிகமாக மார்க்கெட் செங்கழுநீரோடை வீதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் சின்ன காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ராஜாஜி மார்க்கெட், பெரிய காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், நேரு மார்க்கெட் என 2 மார்க்கெட்டுகள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த மார்க்கெட்டில் பல கடைகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போதிய இடவசதியின்றி வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, மார்க்கெட் கடைகளை முழுவதும் இடித்துவிட்டு, தற்போதைய நவீன கால தேவைக்கேற்ப புதிதாக கட்டிடம் கட்ட மாநகராட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற ஏதுவாக ராஜாஜி மார்க்கெட் தற்காலிகமாக ஓரிக்கை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், புதிய ராஜாஜி மார்க்கெட் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேரு மார்க்கெட் சுமார் ரூ.5 கோடி திட்ட மதிப்பில் 80 கடைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கிருந்த கடைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரத்தில் நேரு மார்க்கெட் தற்காலிக இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: