ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 2 பல்கலைக்கழகம் இருந்தது 51 பல்கலைக்கழகங்களாக திராவிட மாடல் ஆட்சி நிகழ்த்தி உள்ளது-அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

ஆலங்குடி : ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 2 பல்கலைக்கழகம் இருந்தது. அமை 51 பல்கலைக்கழகங்களாக திராவிட மாடல் ஆட்சி நிகழ்த்தி உள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இது தொடர்ந்து ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி காண தனி இணையதளம் ஒன்றை தொடங்குவதற்காக ரூ.50 ஆயிரம் நிதியை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார் அப்போது அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது கூறியதாவது:

ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கான சொந்த கட்டிடம் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி கீழாத்தூர் பகுதியில் துரிமாக நடைபெற்று வருகின்றது. மாணவர்கள் எப்போதும் மகிழ்சியோடு, அடுத்தவர்களுக்கு எந்த தீங்கும் நினைக்காமல் நல்ல கல்வியை கற்று வாழ வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைக்கு இந்தியாவிலே 89 சதவீதம் கல்வி அது பெறுவதற்கு முக்கிய காரணமாக காமராஜர். அவருடைய காலம் பள்ளி கல்லூரி பொற்காலம்.

அவருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் இருக்கின்ற பள்ளிகளை கல்லூரிகளை கட்டமைத்தது முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்த நிலையில் 51 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்றால் அது திராவிடர் மாடல் ஆட்சி நிகழ்த்தி இருக்கின்ற சாதனை.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை, ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி, ஒன்றிய செயலாளர் தங்கமணி, ஆலங்குடி நகரச் செயலாளர் பழனிவேல், துணைச் செயலாளர் செங்கோல், அரசு வழக்கறிஞர் கண்ணதாசன் உட்பட கல்லூரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 2 பல்கலைக்கழகம் இருந்தது 51 பல்கலைக்கழகங்களாக திராவிட மாடல் ஆட்சி நிகழ்த்தி உள்ளது-அமைச்சர் மெய்யநாதன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: