தஞ்சாவூர் மாவட்டத்தில் வானவில் மன்றத்தில் 41,280 மாணவர்கள் கல்வி கற்பிப்பு

தஞ்சாவூர், ஏப்.12: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாவணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 41,280 மாணவ- மாணவிகள் கல்வி பயன்று வருகின்றனர் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தைஉண்டாக்கிடும் பொருட்டு எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதனை கருத்தில் கொண்டு வானவில் மன்றம் துவக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள்,உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவியர்களிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்பையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் முக்கிய நோக்கமாகும். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 208 அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு பயிலும் 1,893 மாணவர்கள் 1,639 மாணவிகளும், 7ம் வகுப்பு பயிலும் 1,785 மாணவர்கள், 1,589 மாணவிகளும், 8ம் வகுப்பு பயிலும் 1,699 மாணவர்கள் 1,479 மாணவிகளும் மொத்தம 10,084 மாணவ, மாணவிகளும் 125 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு பயிலும் 2,175 மாணவர்கள், 1,949 மாணவிகளும், 7ம் வகுப்பு பயிலும் 2,214 மாணவர்கள், 2,006 மாணவிகளும், 8ம் வகுப்பு பயிலும் 2,109 மாணவர்கள் 1,939 மாணவிகளும் மொத்தம் 12392 மாணவ, மாணவிகளும் வானவில் மன்றத்தின் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.

அதேபோல, 104 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு பயிலும் 2,658 மாணவர்கள், 3297 மாணவிகளும், 7ம் வகுப்பு பயிலும் 2,960 மாணவர்கள் 3,533, மாணவிகளும், 8ம் வகுப்பு பயிலும் 2,903 மாணவர்கள், 3,453 மாணவிகளும் மொத்தம் 18,804 மாணவ, மாணவிகளும், மொத்தம் 437 அரசு நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு பயிலும் 6,726 மாணவர்கள், 6,885 மாணவிகளும், 7ம் வகுப்பு பயிலும் 6,959 மாணவர்கள் 7,128 மாணவிகளும், 8ம் வகுப்பு பயிலும் 6,711 மாணவர்கள், 6,871 மாணவிகளும் ஆக மொத்தம 41,280 மாணவ, மாணவியர்கள் வானவில் மன்றத்தின் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். இவ்வாறு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் வானவில் மன்றத்தில் 41,280 மாணவர்கள் கல்வி கற்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: