அயோத்தி திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: இயக்குனர் சசிகுமாரின் நடிப்பில், சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படத்தின் திரைக்கதை தன்னுடைய கதை என்று கூறி பேராசிரியர் சங்கர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், நான் எழுதி தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு “யாதும் ஊரே” என்ற தலைப்பில் பதியப்பட்ட திரைக்கதையை எனது அனுமதி இல்லாமல் திருடி ‘அயோத்தி’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். படத்தின் திரைக்கதை மீதான உரிமம் எனக்கு சொந்தமானது. இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும்.

பிற மொழிகளில் டப்பிங் செய்யும் உரிமையை வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், அயோத்தி படத்தின் கதை கடந்த 2016ல் பதிவு செய்யப்பட்டது. மனுதரார் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏற்கனவே திரையரங்குகளில் படம் வெளியான நிலையில் ஓடிடி, இணையதள உரிமை, தொலைக்காட்சி உரிமைகள் வழங்க கூடாது என்ற கோரிக்கையை ஏற்க கூடாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஓடிடி தளத்தில் வெளியிட தடைக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post அயோத்தி திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: