சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா: ஏப்.6-ம் தேதி திருக்கல்யாணம்

சென்னை: சென்னை மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா -2023 கடந்த 28.03.2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி அதிகாரநந்தி காட்சி, திருத்தேர் திருவீதி உலா, அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவீதி உலா என நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 06.04.2023 அன்று அருள்மிகு கற்பகாம்பாள் உடனுரை கபாலீசுவரருக்கு திருக்கல்யாண வைபோவம் நடைபெற உள்ளது.

இத்திருக்கல்யாணம் முடிந்தபின்னர், சென்ற ஆண்டை போல் மொய் எழுத விரும்பும் ஆன்மீக அன்பர்களுக்கு இத்திருக்கோயில் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ வலைதளம் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை https://hrce.tn.gov.in/hrcehome/index.php வலைதளம் மூலம் மொய் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா: ஏப்.6-ம் தேதி திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Related Stories: