விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் திருவள்ளுவர் மைதானபகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை

கரூர், அக்.1: கரூர் நகரின் மையப்பகுதியில் திருவள்ளுவர் மைதானம் செயல்பட்டு வருகிறது. கரூரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதற்கு முன்பு வரை இந்த திருவள்ளுவர் மைதானத்தில்தான் ஆண்டுதோறும் சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாக்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும், ஆண்டுதோறும் இந்த மைதானத்தில் கூடைப்பந்து உட்பட பல்வேறு இந்திய அளவிலான போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தினமும் நூற்றுக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கூடைப்பந்து பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் மைதானத்துக்கு வந்து நடைபயிற்சியும் மேற்கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், மைதான பகுதியில் சுற்றுச்சுவரை ஒட்டி, கட்டிட இடிபாடு பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கும், தினமும் பயிற்சி மேற்கொள்ள வரும் அனைவரும் இதனால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இவர்களின் நிலை கருதி இதனை இந்த பகுதியில் இருந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும் அதனை முடித்து, இடத்தை சுத்தமாக பராமரிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: