குளித்தலை நகரில் போதிய நிதி வந்ததும் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கும்

குளித்தலை, செப்.24: குளித்தலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கையின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால் பஸ் ஸ்டாண்ட் முதல் சுங்ககேட் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் நெடுஞ்சாலை துறையினர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமரன் கூறுகையில், ஆக்கிரமிப்பு அகற்ற போதிய நிதி இல்லாததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்து திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, நிதி வந்தவுடன் குளித்தலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமரன் கூறினார்.

Related Stories: