மகசூலில் அதிக லாபம் பெற ஆலோசனைகரூரில் மக்கள்குறைதீர் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூர், செப். 20: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். இந்த கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 369 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 64 மனுக்கள் பெறப்பட்டது. மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறுதொழில் தொடங்கிட 1 பயனாளிக்கு ரூ. 30ஆயிரம் கடனுதவியும், ஆடு, மாடுகள் வாங்கிட 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 75ஆயிரம் வீதம் 2லட்சத்து 50ஆயிரம் கடனுதவியும், பெட்டிக்கடை வைத்து நடத்திட 1 பயனாளிக்கு ரூ. 50ஆயிரம் கடனுதவியும், ஸ்டேட் ஆப் இன்டியா திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படும் கடன் உதவித் திட்டத்தின் சார்பில் மகேஸ்வரி என்பவரின் தனியார் நிறுவனத்திற்கு ரூ. 1கோடி தொழில் கடனும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ. 1950 மதிப்பில் நடைபயிற்சி வாகனம், 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 78,850 வீதம் ரூ. 3,15,400 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 4,999 வீதம் 14,997 மதிப்பில் காதொலி கருவிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,870 மதிப்பில் இலவச சலவைப் பெட்டியையும் கலெக்டர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசுரூ. 10ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5ஆயிரம், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2ஆயிரம் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக 2 மாணவர்களுக்கு தலா ரூ. 2ஆயிரம் எனவும் கலெக்டர் வழங்கினார். நிகழ்வில், திட்ட இயக்குநர் மந்திராச்சலம், நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, உதவி ஆணையர் (கலால்) பாலசுப்ரமணியன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: