கரூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்ற ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க செயின் திருட்டு

கரூர், ஜூன் 9: கரூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றபோது ஆசிரியர் கழுத்தில் கிடந்த எட்டரை பவுன் தங்க செயின் திருட்டு போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சுபிதா (31). ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், டவுன் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் அளித்த புகாரில், கடந்த மாதம் 24ம் தேதி கரூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு நடந்து வந்தபோது, தனது கழுத்தில் கிடந்த ரூ. 1லட்சத்து 27ஆயிரம் மதிப்புள்ள எட்டரை பவுன் செயினை காணவில்லை என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: