கரூர் பாலிடெக்னிக் கல்லூரி 38வது ஆண்டு விழா

கரூர், மே 21: தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரியில் 38வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி தாளாளர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. இதில் விளையாட்டு போட்டி, இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை இயக்குனரும், தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கந்தசாமி ஐஏஎஸ் காணொலி வாயிலாக மாணவர்களுடன் உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக டோமோரோ நிறுவனர் சிவராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கல்லூரி துணை தலைவர் ஏ.வி.பொன்வேல் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ராஜேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். முனைவர் மோகன்குமார் அனைவரையும் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: