பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி புகளூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலாயுதம்பாளையம், மே11: கரூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி புகளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புகழூர் வட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் கோபி வரவேற்புரை ஆற்றினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவரும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளரும், புகளூர் மண்டல துணை தாசில்தாரருமான அன்பழகன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக புகளூர் வருவாய் ஆய்வாளர் ரஹமத்துல்லா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் கிருஷ்ணவேனி, ராஜகோபால்மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: