வேலாயுதம்பாளையம் அருகே பைக்குகள் விபத்தில் ஒருவர் படுகாயம்

வேலாயுதம்பாளையம், மே 10: வேலாயுதம்பாளையம் அருகே இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (43). இவர் தனது ஸ்கூட்டரில் நொய்யல் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சேமங்கி அருகே வந்தபோது வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் நோக்கி எதிர்திசையில் பைக்கில் வந்த திருப்பூர் பரமேஸ்வரிநகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பிரபு (27) என்பவர் தங்கவேல் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதினார். இதில் தங்கவேல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: