அவிநாசி அரசு கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை

அவிநாசி,ஏப்.25: அவிநாசி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நளதம் தலைமையேற்று,  பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அதன் நன்மைகளைப் பற்றியும், சேமிப்பு பழக்கத்தை பற்றியும் கல்லூரியின் நிலைமை பற்றியும் விவரித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் ஹேமலதா வரவேற்றார். இயற்பியல் பேராசிரியர் பாலமுருகன் கல்லூரியின் குறைகளைப் பற்றியும் நிதி நிலைமைகள் பற்றியும் பேசினார். கல்லூரியின் தேவைகள், கல்லூரியின் வளர்ச்சிக்காக பணிகளைப் பற்றி பெற்றோரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. பெற்றோர்கள் இக்கல்லூரியில் முதுநிலைபட்டப் படிப்புகளை கொண்டுவரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். வணிகவியல் துறைத்தலைவர் செல்வதரங்கினி நன்றிகூறினார்.

Related Stories: