தோகைமலை அருகே ஆர்டி மலையில் விராச்சிலேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தோகைமலை, ஜன.28: தோகைமலை அருகே ஆர்டி மலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் கோயிலில் மக்கள் மத்தியில் பரவி வரும் கொரோனா 3வது அலையில் இருந்து பொதுமக்களை காக்க தேய்பிறை அஸ்டமி சிறப்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி சமேத சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிசேகம் செய்தனர். பின்னர் கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு பால், பண்ணீர், பஞ்சாமிற்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடந்தது. தொடர்ந்து கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வடை மாலை அனிவித்து தேங்காய், பூசனிக்காய் விளக்கு ஏற்றி கொரோனா 3வது அலையில் இருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டி தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜையில் காலபைரவரை வழிபட்டனர். பின்னர் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், டி.எடையபட்டி ரெத்தினகிரீஸ்வரர் ஆகிய கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.

Related Stories: