குளித்தலை தொகுதியில் பொங்கல் பண்டிகை 61,262 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கல்

குளித்தலை, ஜன. 12: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை நகரப்பகுதியில் வைகை நல்லூர், அக்ரஹாரம், பெரிய பாலம் ஆகிய பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற தலைவர் பல்லவி ராஜா, குளித்தலை கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் குமார் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்எல்ஏ மாணிக்கம் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு குளித்தலை தொகுதிக்குட்பட்ட அறுபத்தி ஆறாயிரத்து 262 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் மாணிக்கம், அரசு வக்கீல் சாகுல் அமீது, மாவட்ட இளைஞரணி அருண்மொழி, தொகுதி பொறுப்பாளர் வி.பி.சேகர், இன்ஜினியர் கணேஷ், நகர துணைச் செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமார் மற்றும் பொதுமக்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: