பொங்கல் பண்டிகை மண்டியில் வாழைத்தார் கூடுதல் விலைக்கு ஏலம்

கரூர், ஜன. 12: கரூர் வாழைத்தார் கமிஷன் மண்டிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தார் வகைகள் கூடுதல் விலைக்கு ஏலம் போனது. கரூர் ரயில் நிலையம் செல்லும் பாதையில் வாழைத்தார் கமிஷன் மண்டி பல ஆண்டுகளாக செயல்படுகிறது. கரூர் மற்றும் பல்வேறு மாவட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார் ரகங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. தார்களின் தேவைக்கேற்பவும், வரத்துக்கு ஏற்பவும் ஏலம் விடப்பட்டு வருகிறது. அந்த வகையில், முக்கிய பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி மற்றும் விழாக்காலங்களில் வரத்து குறைவாக இருந்தாலும் தார்கள் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகை ஒரு சில நாட்களில் வரவுள்ளதால், கமிஷன் மண்டிக்கு குறைந்த அளவிலான தார்களே வந்தன. தேவை அதிகம் என்பதால் பூவன் வகை தார்கள் நேற்று ரு. 400 வரையிலும் ஏலம் விடப்பட்டது. தேவை காரணமாக வியாபாரிகளும் பூவன் வகை தார்களை ஏலம் எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: